இரட்டை இலை விவகாரம்; சின்னம், கொடி பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை - நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஓபிஎஸ்-க்கு தடை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் உள்ள பிரச்சனை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழங்கி தொடர்ந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை கோரி இரு அணியினரும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நீதிமன்றம் உத்தரவு
தற்போது இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி வசமே இருந்தது, ஆனால் அதனை கைப்பற்ற ஓபிஎஸ் அணி பல முற்சிகளை மேற்கொண்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.