விடாமல் முயற்சி செய்யும் ஓபிஎஸ்...!! மீண்டும் ஒரு மேல்முறையீடு மனு தாக்கல்!!
அதிமுகவின் கட்சி மற்றும் கொடி போன்றவற்றை பயன்படுத்த தடை ஓபிஎஸ்'ஸுக்கு உயர்நீதிமன்றம் நேற்று தடைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக விவகாரம்
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து ஓபிஎஸ் "ஒருங்கிணைப்பாளர் - அதிமுக" என்ற பதவியையே பயனப்டுத்தி வருகின்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
மனுவின் விசாரணையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட பிறகும் அதே பதவியை பயன்படுத்தி வருவது தேவையில்லாத குழப்பத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டு தங்களது வாதங்களை முன்வைத்தார்.
மேல்முறையீடு மனு
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய குறுகிய அவகாசத்தை ஓபிஎஸ் தரப்பு கோரிய நிலையில், எத்தனை முறை இப்படி வழக்கு தொடருவீர்கள்? என்றும் நேரம் கேட்பீர்கள்? என்று நீதிபதி சதீஷ்குமார் ஓபிஎஸ் தரப்பினரை வினவினார்.
மேலும், அதிமுகவின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ் தரப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தற்போது தனி நீதிபதியின் இந்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் நாளை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.