ஜூலை 1-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும், ஓ.பி.எஸ் அறிவிப்பு! - அடுத்த மூவ் என்ன?
வரும் ஜூலை 1-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்
சென்னையில் வரும் ஜூலை 1-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதில் இவர் மாநில மாநாடு நடத்தப்படுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில தினங்களுக்கு முன்பு மக்களவை தேர்தல் தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். தற்போது ஓ.பி.எஸ் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, மக்களவை தேர்தல் தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.
அறிவிப்பு
இந்நிலையில், அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பில், "அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும்.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.