ஓபிஎஸ் - எடப்பாடி 2 பேரும் பாஜக கூட்டணிதான் - ஒரே போடுபோட்ட நயினார்
ஓபிஎஸ் - எடப்பாடி 2 பேரும் பாஜக கூட்டணியோடுதான் இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - எடப்பாடி
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். தொடர்ந்து அமித் ஷா தங்களை சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரை வந்த நயினார் நாகேந்திரன் வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள திருமண மகாலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது.
நயினார் உறுதி
அதனை அகற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். மக்கள் நலனுக்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் முடிவு எடுக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே பாஜக உடன் கூட்டணியில் இருக்கிறார். அதன் காரணமாகவே அமித் ஷா வருகையின் போது ஓபிஎஸ்-ஐ அழைக்கவில்லை.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்ததற்கான காரணமே வேறு. ஓபிஎஸ் எங்களுடன் கூட்டணியில் இருப்பதால், அவரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே எங்காளுடன் கூட்டணியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கமே காரணம். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.