தவெகவுடன் கூட்டணி? அவசரப்படாதீங்க.. முக்கிய அப்டேட் கொடுத்த ஓபிஎஸ்

Vijay Tamil nadu O. Panneerselvam Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jul 30, 2025 01:09 PM GMT
Report

கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி?

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த நிலையில், அவரை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.

vijay - o panneerselvam

மேலும், அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வாய்ப்பு இருந்தாலும், ஓபிஎஸை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

ஓபிஎஸ் குறித்த கேள்வி - ஒரே வரியில் அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?

ஓபிஎஸ் குறித்த கேள்வி - ஒரே வரியில் அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா?

ஓபிஎஸ் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவை கண்டித்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தவெகவுடன் கூட்டணி? அவசரப்படாதீங்க.. முக்கிய அப்டேட் கொடுத்த ஓபிஎஸ் | Ops Alliance Update Announcement Tomorrow

நாளை காலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரை அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைத்தால், அது அதிமுக - பாஜக வெற்றியைக் கணிசமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.