எனக்கு தெரிஞ்சிருந்தா ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் - நயினார் நாகேந்திரன்
ஓபிஎஸ் தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-க்கு அனுமதி மறுப்பு
பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த நிலையில், அவரை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , “பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
நயினார் விளக்கம்
குறிப்பாக அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டார்களா? இல்லையா? என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் பிரதமரை சந்திக்க அவருக்கு நேரம் வாங்கித் தந்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியின் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றார். ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு அளிக்கக் கூட பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.