சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? சர்ச்சையான சபாநாயகரின் பேச்சு!

Tamil nadu Government of Tamil Nadu DMK Social Media
By Swetha Jun 22, 2024 10:00 AM GMT
Report

எதிர்கட்சியினரிடம் சபாநாயகர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

எதிர்க்கட்சிகளின் குரல்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதன் மூன்றாவது நாள் அலுவல் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நேரத்தை துவங்குவதாக அறிவித்தார். அந்த சமயத்தில், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? சர்ச்சையான சபாநாயகரின் பேச்சு! | Opposition Parties Voice Suppressed By Speaker

அப்போது, சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிப்பதாக சொன்னதும் சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் மரணம் விவாகரத்துக்கு சிபிஐ விசாரணை அவசியம் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலுவான கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த இது தொடர்பாக அமிளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றைய விவாதத்தையும் புறக்கணித்தனர். இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் பேசிய வீடியோவை அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார்.

விஷச்சாராய விவகாரம்; இந்த 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் - பகீர் கிளப்பும் ஈபிஎஸ்!

விஷச்சாராய விவகாரம்; இந்த 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் - பகீர் கிளப்பும் ஈபிஎஸ்!

சர்ச்சையான  பேச்சு

அதில், "சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைகுறிப்பில் இடம் பெறாது என்றும் எதிர்கட்சியினரின் உரைகளை வெளியிடுவதற்கோ எழுதுவதற்கோ எந்த ஊடகத்திற்கும் உரிமை இல்லை" என்று சபாநாயகர் பேசுகிறார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? சர்ச்சையான சபாநாயகரின் பேச்சு! | Opposition Parties Voice Suppressed By Speaker

ஏற்கனவே சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோவை முழுமையாக ஒளிபரப்புவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இப்போது சபாநாயகர் அவர்களே இப்படி பேசுவது ஜனநாயகமா என்று நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் சுமந்த சி ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.