விஷச்சாராய விவகாரம்; இந்த 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் - பகீர் கிளப்பும் ஈபிஎஸ்!

Tamil nadu DMK Edappadi K. Palaniswami Death Kallakurichi
By Swetha Jun 22, 2024 04:28 AM GMT
Report

கள்ளச்சாரய இறப்பிற்கு 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் என ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக கவுன்சிலர்கள்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விஷச்சாராய விவகாரம்; இந்த 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் - பகீர் கிளப்பும் ஈபிஎஸ்! | 2 Dmk Counselours Involved Kallakurichi Issue Eps

தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. பூகம்பமாக வெடித்த இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திமுக அரசின் மீது தங்களது அதிருப்தியை காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கள்ளச்சாரய இறப்பிற்கு முக்கிய காரணமானவர்கள் 2 திமுக கவுன்சிலர்கள் தான்.

அவர்களை கைது செய்யாமல் காப்பாற்ற நினைக்கிறது இந்த விடியா திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளே..நான் எங்கும் ஓடி ஒழியல - முதல்வர் ஸ்டாலின் தாக்கு!

மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளே..நான் எங்கும் ஓடி ஒழியல - முதல்வர் ஸ்டாலின் தாக்கு!

ஈபிஎஸ் பகீர்

நாட்டையே உலுக்கிய இந்த விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. காவல் அதிகாரிகளுடன் பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும் சாராய விற்பனையை தடுக்க முடியவில்லையா? விஷச்சாராயம் அருந்தி 50 பேர் பலியானதற்கு

விஷச்சாராய விவகாரம்; இந்த 2 திமுக கவுன்சிலர்கள் தான் காரணம் - பகீர் கிளப்பும் ஈபிஎஸ்! | 2 Dmk Counselours Involved Kallakurichi Issue Eps

திறமையற்ற அரசே காரணம்கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய இறப்பிற்கு முக்கிய காரணமானவர்கள் 2 திமுக கவுன்சிலர்கள் தான்.அவர்களை கைது செய்யாமல் காப்பாற்ற நினைக்கிறது இந்த விடியா திமுக அரசு.

மாவட்ட ஆட்சித் தலைவர் சரியான தகவலை சொல்லி இருந்தால் இவ்வளவு மரணங்கள் ஏற்பட்டு இருக்காது. இதற்கு முழுக்காரணம் ஆளும் திமுக அரசு. நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவத்தின் வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என கூறினா