மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளே..நான் எங்கும் ஓடி ஒழியல - முதல்வர் ஸ்டாலின் தாக்கு!

M K Stalin Death Kallakurichi Social Media
By Swetha Jun 21, 2024 12:30 PM GMT
Report

சட்டசபையில் வெளிநடப்பு செய்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

மலிவான அரசியல்

விஷச்சாராயம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளே..நான் எங்கும் ஓடி ஒழியல - முதல்வர் ஸ்டாலின் தாக்கு! | Cm Stalin Condemns Opposition Parties

தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க அதிமுக, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை தடை செய்வது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, சட்டசபை தொடங்கியதும் விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

விஷச்சாராய விவகாரம்; 49 பேர் உயிரிழப்பு- முக்கிய குற்றவாளி கைது!

விஷச்சாராய விவகாரம்; 49 பேர் உயிரிழப்பு- முக்கிய குற்றவாளி கைது!

முதல்வர் ஸ்டாலின்

இதை தொடர்ந்து, அவர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த செயலை கண்டித்து தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளே..நான் எங்கும் ஓடி ஒழியல - முதல்வர் ஸ்டாலின் தாக்கு! | Cm Stalin Condemns Opposition Parties

அதில், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு…

எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்…என தெரிவித்துள்ளார்.