விஷச்சாராய விவகாரம்; 49 பேர் உயிரிழப்பு- முக்கிய குற்றவாளி கைது!
கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஷச்சாராயம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
குற்றவாளி கைது
இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்று 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன், விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.