நெருங்கிய நண்பரை காதலித்து மனந்த சிஇஓ - வைரலாகும் ஃபோட்டோஸ்

Marriage Viral Photos Same-Sex Marriage
By Sumathi Jan 12, 2024 03:30 PM GMT
Report

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ தனது நண்பரை திருமணம் செய்துள்ளார்.

 ஓப்பன் ஏஐ சிஇஓ

சாம் ஆல்ட்மேன் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார். இவரை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் சாம் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

openai-ceo marriage

இந்நிலையில் சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நம்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டார். ஹவாயில் மிக எளிமையான முறையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் நடைபெற்றது.

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு என்ன?

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்.. உச்சநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு என்ன?

 திருமணம் 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆலிவர் முல்ஹெரின் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பபை முடித்திருக்கிறார். இவர் Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA foundation ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

நெருங்கிய நண்பரை காதலித்து மனந்த சிஇஓ - வைரலாகும் ஃபோட்டோஸ் | Openai Ceo Sam Altman Marries His Boyfriend

தற்போது ஐஓடி (IoT)என்ற நிறுவனத்தில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.