24 மணி நேரமும் சாப்பாடு கூடவே இதுவும் - இஸ்ரேல் வீரர்களுக்கு திறந்தவெளி சமையலறை!
இஸ்ரேல் வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் சமையலறை திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வீரர்கள்
14வது நாளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகளுக்கும் இடையே போர் தாக்குதல் நிலவி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின. இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகம் என பல அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
திறந்த சமையலறை
தொடர்ந்து, வடக்கு காசாவிலுள்ள மக்களை வெளியேறி தெற்கு காசாவில் குடியேறுமாறு எச்சரித்துள்ளனர். மேலும், அமெரிக்கா, சீனா, இந்தியா என பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கும் வகையில் காசா எல்லையில் திறந்தவெளி சமையலறை திறக்கப்பட்டுள்ளது.
அங்கு உணவு வழங்குவது, முடி திருத்துவது, மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது போன்றவை அளிக்கப்படுகின்றன.