பப்பு வேகாது: தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட ஓபிஎஸ்!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Dec 21, 2022 01:02 PM GMT
Report

 தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் என எடப்பாடி பழனிசாமிக்கு, ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.

 ஓ.பன்னீர் செல்வம்

சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,

பப்பு வேகாது: தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் - ஈபிஎஸ்க்கு சவால் விட்ட ஓபிஎஸ்! | Opaneerselvam Speech In Chennai Meeting

எனக்கு சோதனை வந்த போது என்னை தாங்கி பிடித்த தொண்டர்கள். பல சோதனைகள் கண்ட கட்சி அதிமுக.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியை சிற்பாக வழி நடத்தி சென்றார்கள். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானம் ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?

சவால்

அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது என விமர்சனம் செய்த ஓபிஎஸ், ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்து கொண்டு இருக்கிறது. ஓ.பி.எஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது.

என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பார் என சவால் விடுத்தார். கட்சியை கபலிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது எனவும் எனத் தெரிவித்துள்ளார்.