4 நாட்கள்.. 13 மாநிலங்களை கடந்து செல்லும் ஒரே ரயில் - இந்த மாநிலத்தில் மட்டும் நிற்காது!
13 மாநிலங்களை கடந்து செல்லும் ரயில் ஒன்று இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது
நவ்யுக் எக்ஸ்பிரஸ்
இந்தியாவின் ரயில் சேவை தான் உலகின் 4-வது பெரிய ரயில் சேவையாக உள்ளது. பெரும்பாலான மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாகவும் ரயில் சேவை உள்ளது. மேலும், ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்களும் பலர் உள்ளனர்.
அந்தவகையில், 13 மாநிலங்களை கடந்து செல்லும் ரயில் ஒன்று இந்தியாவில் இயக்கப்பட்டு வருகிறது. "நவ்யுக் எக்ஸ்பிரஸ்'" என்ற இந்த ரயில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ஜம்மு தாவி வரை செல்கிறது. இந்த ரயில் மங்களூரில் இருந்து புறப்பட்டு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம்,
4 நாட்கள் பயணம்
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் வழியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை சென்றடைகிறது. செல்லும் வழியில் 12 மாநிலங்களில் மட்டும் நிற்கும் நவ்யுக் எக்ஸ்பிரஸ் ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் நிற்காமல் செல்கிறது.
மேலும், இந்த ரயில் தொடர்ந்து 4 நாட்கள் பயணம் செய்து 68 மணி 20 நிமிடங்கள் 13 மாநிலங்களை கடக்கிறது. இந்தியாவில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும் ரயில்களில் "நவ்யுக் எக்ஸ்பிரஸ்" முக்கிய இடத்தை பெற்றுள்ளது.