இந்த 3 ராசிக்காரர்கள் மட்டும் தான் காலில் கருப்பு கயிறு கட்டணுமாம்...என்ன காரணம் தெரியுமா?
எந்த 3 ராசிக்காரர்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவது நல்லது என்பதை இப்பதிவில் காணலாம்.
கருப்பு கயிறு
கருப்பு கயிறு கட்டுவது நல்லது என சாஸ்திரம் கூறுகிறது. திருஷ்டிக்காக கட்டப்படும் இந்த கருப்பு கயிறு 3 ராசிக்காரர்கள் மட்டுமே கட்டலாம் என்கின்றனர். பெரும்பாலும், காத்து கருப்பு அண்டாது என்பதற்கு கயிறு கட்டுவது தான் ஐதீகம்.
கறுப்பசாமி கோவில், காளியம்மன் கோவிலுக்கு சென்று பூசாரி கையால் மந்திரித்து கறுப்பு கயிறு கட்டினார்கள். இந்தக் கயிறு கட்டப்பட்ட கையிலோ, காலிலோ வேறு எந்த நிறக் கயிறும் கட்டக்கூடாது என்ற விதி உள்ளது. இன்றைக்கு இளைஞர்களும் இளம் பெண்களும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவதை பேஷனாக செய்து வருகின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி காலில் கருப்பு கயிறு கட்டுவதன் மூலம் ராகு, கேது, சனி ஆகிய மூன்று கிரகங்களின் பலன்கள் கிடைக்கும். இந்த கிரகங்களின் வலிமை குறைந்தால் அது வலிமையடையும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
3 ராசிக்காரர்கள்
அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில் கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதன் மூலம் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். சனி பகவான் முதலில் ஒருவரது கால்களைத்தான் பிடிப்பார். எனவேதான் கால்களை சரியாக கழுவ வேண்டும் என்பார்கள்.
அது போல் கருப்பு கயிறை காலில் கட்டுவதன் மூலம் சனி தோஷம் நீங்கும். அத்துடன் ராகு, கேது பாதிப்புகளும் ஏற்படாது. கருப்பு கயிறு கட்டியதும் சனி பகவானின் மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். கயிற்றை கட்டும்போது 9 முடிச்சுகள் போட வேண்டும்.
பெண்கள் இடது காலிலும் ஆண்கள் வலது காலிலும் அணியலாம். சிலருக்கு கருப்பு ஆகாவிட்டால் சிகப்பு கயிறும் கட்டுகிறார்கள். இந்த கயிறுகளால் எதிர்மறை ஆற்றல் இல்லாமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி மகரம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை கட்டலாம்.