கட்டாயத்தின் பேரில் தான் CAA'விற்கு ஆதரவு - இபிஎஸ்!!
இன்று சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டாயத்தால் தான் CAA சட்டத்திற்கு ஆதரவளித்ததாக கூறினார்.
எடப்பாடி செய்தியாளர்கள் சந்திப்பு
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, இஸ்லாமியர்கள் மீது அதிமுகவுக்கு ஏன் திடீர் பாசம் என கேள்வி எழுப்பினார் என்பதை சுட்டிக்காட்டி, அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என விமர்சித்து, ஆனால் அதற்கு சட்டப் பேரவை தலைவர் பதில் அளிக்க அனுமதிக்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.
அதிமுக அரசின் சார்பில் இஸ்லாமியர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்ட அவர், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம் கோட்டை மேட்டில் காவலர்கள் இஸ்லாமியர்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டில் 19 பேர் இறந்ததை சுட்டிக்காட்டி, கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி 19 பேரை சுட்டு வீழ்த்தியதுதான் திமுக அரசு தான் சாடினார்.
கோவை குண்டு வெடிப்பில் சிறையில் இருந்த மீரான் என்ற சிறைவாசி அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் பாபர் மசூதி இடிக்கும் போது இந்தியாவே பற்றி எரிந்தது, ஆனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது என்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இஸ்லாமியரான அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கியது அதிமுகதான் என்ற அவர், அதனை எதிர்த்து வாக்களித்தது திமுகதான் என குற்றம்சாட்டி தங்களுக்கு விருப்பம் இல்லாத போதிலும் கூட்டணி தர்மத்திற்காக கட்டாயத்தின் பேரில் சில சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றினோம் என தெரிவித்தார்.