பாஜக இல்லாத கூட்டணி கட்சிகளை வரவேற்கிறோம்..! ஜெயக்குமார் அதிரடி

ADMK BJP Edappadi K. Palaniswami D. Jayakumar
By Karthick Feb 04, 2024 10:44 AM GMT
Report

கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக - தேர்தல்

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்த நிலையில், தற்போது புது கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

only-alliance-with-parties-without-bjp-jayakumar

பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தான் அதிமுகவின் முக்கிய டார்கெட்டாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இது வரை அதிமுகவின் சார்பில் இருந்து வெளிப்படையாக அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதெல்லாம் சஸ்பென்ஸ்..!! திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வரும் - ஜெயக்குமார் அதிரடி

அதெல்லாம் சஸ்பென்ஸ்..!! திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வரும் - ஜெயக்குமார் அதிரடி

பாஜக அல்லாத

முன்னதாக மீண்டும் அதிமுகவின் கூட்டணிக்கு பாஜக முயற்சிப்பதாகவும், அதற்காக தான் ஜி.கே.வாசன் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என்றெல்லாம் கருத்துக்கள் வெளிவந்தன.

only-alliance-with-parties-without-bjp-jayakumar

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பாஜக இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு, கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

only-alliance-with-parties-without-bjp-jayakumar

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 2வது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் இந்தப் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.