இனிமே வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை.. மீதி நாள் அதை செய்தால் போதும் - அரசு புது திட்டம்!

Japan China World Russia
By Swetha Dec 10, 2024 01:30 PM GMT
Report

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் ஜப்பான் அரசு புதிய திட்டத்தை அறிமுப்படுத்தியுள்ளது.

 4 நாட்கள்..

உலகில் உள்ள பல நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் பெரும் வீழ்ச்சியை எட்டியுள்ளது. இதற்காக ரஷியாவில் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அந்நாட்டு அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார்.

இனிமே வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை.. மீதி நாள் அதை செய்தால் போதும் - அரசு புது திட்டம்! | Only 4 Days Working In Office Nwe Govt Rule Japan

மேலும், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் பெரிது நாட்டம் காட்டுவதில்லை என புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. அதிலும், ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இனி வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை - அசத்தல் திட்டத்துடன் களமிறங்கியுள்ள நாடு!

இனி வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை - அசத்தல் திட்டத்துடன் களமிறங்கியுள்ள நாடு!

அரசு திட்டம்

2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவாகியுள்ளது. எனவே ஜப்பான் அரசு பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை

இனிமே வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை.. மீதி நாள் அதை செய்தால் போதும் - அரசு புது திட்டம்! | Only 4 Days Working In Office Nwe Govt Rule Japan

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார். வருகின்ற 2025 ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் காரணமாக ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.