கட்டிப்பிடிக்க மூன்று நிமிடம்தான்..விமான நிலையம் போட்ட கண்டிஷன் - கடுப்பான பயணிகள்!
விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிஷன்கள்
விமான நிலையங்களில் பெரும்பாலும் அன்பானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர்களை ஆரத்தழுவி வழியனுப்பி பிரியாவிடை கொடுப்பது நாம் அறிந்தவைதான். அப்போது மனித உணர்ச்சிகள் தவழும் இடமாக விமான நிலையங்கள் இருக்கும்.
இந்த நிலையில், நியூசிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு போடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் 'கட்டி தழுவுவதற்கான நேரம் - அதிகப்பட்சம் 3 நிமிடங்கள்.
விமான நிலையம்
நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து விமான நிலைய நிர்வாகத்தினர் கூறியதாவது, காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.