இனி மது வாங்க டாஸ்மாக் போக வேண்டாம் - ஆன்லைன் டெலிவரி வந்தாச்சு!
Swiggy, BigBasket மற்றும் Zomato போன்ற நிறுவனங்கள் விரைவில் பீர், ஒயின் மற்றும் மதுபானங்கள் போன்ற குறைந்த ஆல்கஹால் பானங்களை விநியோகிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
உலக நவீன மயமாகிவருகிறது. மனிதனும் மெல்ல சோம்பேறியாகி வருகிறான். அதன் காரணமாக தொழில்நுட்பம் என்ற பெயரில் அந்த சோம்பேறித்தனத்தை மறைக்க பல புது புது தொழில்கள் அறிமுகமாகி வருகின்றன.
அப்படி அறிமுகமான ஒன்று தான் டெலிவரி சேவை. முன்னர் தபால் அல்லது மணி ஆர்டர் அல்லது சில நினைவு பொருட்கள் மட்டுமே அனுப்பட்டன. தற்போது ஷாப்பிங்கில் துவங்கி, உணவு வரை அனைத்துமே ஆன்லைன் டெலிவரி தான்.
அன்றாட வாழ்க்கையின் ஒன்றாக இணைந்து விட்ட இந்த ஆன்லைன் டெலிவரி முறையில் விரைவில் மதுபானங்களும் டெலிவரி செய்யப்படவுள்ளன என்ற தகவல் வெளிவந்துள்ளது.
மது...
புது தில்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இது தொடர்பான திட்டங்களுக்கு முன்னெடுப்புகள் ஆராயப்பட்டு வருவதாக தகவல் உள்ளது.
இது தொடர்பான செய்தியை எகனாமிக் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இருக்கும் சாதக பாதகங்களை குறித்து சம்மந்தபட்ட அதிகாரிகள் அணுகி பேச்சுவார்தைகள் நடத்தப்படுகிறதாம்.
இதில் குறிப்பிடத்தக்கவிஷயம் என்னவென்றால், தற்போதே ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மதுவை ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பதே.