இறைச்சியை மிஞ்சும் வெங்காயம்; ஒரு கிலோ ரூ.1000 - மக்கள் அதிர்ச்சி!

Onion Philippines
By Sumathi Jan 28, 2023 09:49 AM GMT
Report

வெங்காயம் ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

பொருளாதார நெருக்கடி

கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பணவீக்கம் உயர்ந்தது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலையும் முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்த்துள்ளது. தென் கிழக்கு நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸில், உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைந்து வருகிறது.

இறைச்சியை மிஞ்சும் வெங்காயம்; ஒரு கிலோ ரூ.1000 - மக்கள் அதிர்ச்சி! | Onion Price In Philippines Now It Costs Is High

இதனால், அதிகரித்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22 ஆயிரம் டன்னிற்கு காய்கறிகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் விவசாய நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வெங்காய விலை

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக முக்கிய உணவு பொருளாக இருந்து வரும் வெங்காயத்தின் விலையேற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய வெங்காயம் பல மடங்கு விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது ஒரு நாள் சராசரி வருமானத்தை விட அதிகம் என்றும் இறைச்சி விலையை மிஞ்சி விட்டதாகவும் அந்நாட்டு மக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கமாக வெங்காயங்களை திருடுவது, திருமணத்துக்கு பரிசாக வழங்குவது என அந்நாட்டில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

மற்றொரு புறம், உணவுப்பொருட்களின் சுவையை கூட்ட வெங்காயத்துக்கு பதில் மாற்று பொருளை உணவு விரும்பிகள் தேட தொடங்கி உள்ளனர்.