45 வருஷமா பூண்டு - வெங்காயத்தை தள்ளி வைத்த கிராமம் - ஷாக் பின்னணி!

Bihar
By Sumathi Jan 27, 2023 06:51 AM GMT
Report

45 ஆண்டுகளாக பூண்டு - வெங்காயத்தை கிராமம் ஒன்று பயன்படுத்தாமல் இருக்கிறதாம்..

வினோதம்

வெங்காயம் - பூண்டு உபயோகிப்பதால் உணவின் சுவை அதிகரிக்கிறது. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்நிலையில், பீகாரில் உள்ள ஜெகனாபாத் அருகே திரிலோகி பிகா என்ற கிராமம் உள்ளது.

45 வருஷமா பூண்டு - வெங்காயத்தை தள்ளி வைத்த கிராமம் - ஷாக் பின்னணி! | Onion And Garlic Is Banned In Bihar Village

இங்கு சுமார் 30 முதல் 35 வீடுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து வீடுகளிலும் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் வெங்காயம், பூண்டு இல்லாத உணவை உண்கின்றனர்.

 கோவில் பின்னணி

கிராமத்தின் பெரியோர்கள் இது குறித்து கூறுகையில், கிராமத்தில் தாகுர்பாடி கோவில் உள்ளது. இது பல ஆண்டுகள் பழமையானது. மேலும் இந்த கோவிலின் காரணமாக, மக்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை விட்டு சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாக விலகி இருக்கிறார்கள்.

மேலும், இந்த மரபை மீற முயன்றபோது பல விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வீடுகளில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதனால், மக்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தாமல் சந்தையில் இருந்து கொண்டு வருவதையும் நிறுத்திவிட்டனர்.

மேலும், இங்கு இறைச்சி, மது போன்ற பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு யாரும் மது அருந்துவதை பார்க்க முடியாதாம்..