வெங்காயத்துக்கு இறுதிச் சடங்கு - இதென்ன வினோதமா இருக்கு!
விவசாயிகள் வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை சரிவு
மத்தியப் பிரதேசம், மந்த்சௌர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.1 ஆக சரிந்துள்ளது. நாட்டிலேயே அதிகம் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மல்வா - நிமர் பகுதியில்,

உற்பத்தி செலவான ரூ.10-12ஐ கூட ஈடுகட்ட முடியாமல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.1 முதல் ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு காரணம், மத்திய அரசு விதிக்கும் 25% ஏற்றுமதி வரி தான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இறுதிச் சடங்கு
இந்த வரியால் வெளிநாடுகளில் போட்டியிட முடியாமல், ஏற்றுமதியாக வேண்டிய வெங்காயம் அனைத்தும் உள்நாட்டுச் ந்தையில் குவிந்து, வரத்து அதிகரித்து, விலை கடுமையாகக் குறைந்துவிட்டது.

இதனால் விவசாயிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில், வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உரிய விலை நிர்ணயிக்கப்படவும், ஏற்றுமதி வரியை குறைக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.