ஒய்வு பெறவுள்ள 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பணி நீட்டிப்பு- என்ன காரணம்?

India ISRO
By Swetha Apr 02, 2024 09:30 AM GMT
Report

8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி முகமையாகும்.

ஒய்வு பெறவுள்ள 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பணி நீட்டிப்பு- என்ன காரணம்? | One Year Extension 8 Isro Scientists

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் அங்கு பணிப்புரிந்து வருகின்றனர்.

புதிய சாதனை..ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் - அசத்திய ஸ்பேஸ் எக்ஸ்!

புதிய சாதனை..ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் - அசத்திய ஸ்பேஸ் எக்ஸ்!

என்ன காரணம்?

மேலும், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றுகின்றனர். 

ஒய்வு பெறவுள்ள 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பணி நீட்டிப்பு- என்ன காரணம்? | One Year Extension 8 Isro Scientists

இவர்களது பணிக் காலமானது ஏப்ரல்,மே, ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. ஒய்வு பெறவுள்ள இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.