100 குழந்தைக்கு ஒரு கழிவறை - மோசமான நிலையில் ரஃபா
ரஃபா அகதிகள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் கடந்த சில மாதங்களாக பலஸ்தீனிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பொது மக்கள் போர் சூழல் காரணமாக எகிப்து எல்லையான ரஃபாவில் உள்ள அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.
சில வாரங்களுக்கு முன், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. ஐ.நா மன்றம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்தனர். சமூக ஊடகங்களில் பெரும் கண்டனம் எழுந்தது.
ஆக்ஸ்பாம்
இஸ்ரேலிய தாக்குதல்களினால் இருப்பிடங்களை இழந்து ரஃபா நகரில் குவிந்த பலஸ்தீன குடிமக்களுக்காக நிற்கும் அமைப்பு ‘Oxfam’. இது ஒரு அரசு சாரா சர்வதேச அமைப்பாகும். இது வறுமையை ஒழிக்கவும் சமத்துவத்தை உருவாக்கவும் பாடுபடுகிறது.
ரஃபா நகருக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் அனைவருக்கும் பொதுவான கழிப்பறை ஒன்று இருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வமைப்பு வழங்கிய விவரங்களின்படி மேற்கத்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.