மறுத்த மாணவி - வெறியில் கழுத்தறுத்து கொடூர கொலை செய்த இளைஞர்!
கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தலைக் காதல்
விழுப்புரம், ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன். இவரது மகள் தரணி(19). தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வீட்டுத் தோட்டத்தில் நின்றுக் கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.'
இதில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்ததில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் போலீஸாரிடம் புகாரளித்தனர். தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொடூரக் கொலை
அதனையடுத்து, கொலை செய்த கணேஷ் என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞரை தரணி காதலித்தது தெரிய வந்தது. கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானவன் என்பதை காலப்போக்கில் தெரிந்துகொண்ட தரணி அவரிடம் பழகுவதை குறைத்துக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அவரது தோட்டத்திற்கு சென்று தனிமையில் இருந்த தரணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.