15 வயதில் தாய்; 30 வயதிலேயே பாட்டி - கருக்கலைப்பு? பெண் அதிர்ச்சி தகவல்
தனது 30 வயதிலேயே பாட்டியான பெண் ஒருவர் நெகிழ்ச்சி கதையை பகிர்ந்துள்ளார்.
15 வயதில் தாய்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரூத் கிளேட்டன்(33). இவர் தனது 15 வயதிலேயே, அதாவது பள்ளி பருவத்தில் கர்ப்பமாகி தனது முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவரது மகள் ரோஸிற்கு தற்போது, கோரா என்கிற பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் ரூத் பாட்டியாகியுள்ளார். இவரது ஆதரவு பணியாளர் இதுகுறித்து கூறுகையில், "ரூத் உடைய காதலனின் குடும்பத்தை நான் சந்தித்தேன். அவரது குடும்பம் மிகவும் அற்புதமான குடும்பம். ரூத் குழந்தை பெற்றெடுத்ததைப் பார்த்து நான் கண் கலங்கினேன்.
இளைய பாட்டி
அப்போது அவள் ஒரு போர்வீரனைப் போல இருந்தாள்" எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, ரூத் பேசுகையில் ரோஸ் கர்ப்பமானபோது 14 வயதுதான், ஆரம்பத்தில் அவர் கர்ப்பத்தை கலைக்க விரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் கருக்கலைப்பு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த முடிவு தனக்கு சிறந்த முடிவாக அமைந்தது. வாழ்க்கையில் மற்றவரின் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதும், பொறுப்பாக இருப்பது குறித்தும் தனது மகள் தனக்கு புரிய வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.