பாட்டியை மனைவி என அழைத்த சிறுவன் - ஆடிப்போன குடும்பம்!
தனது பாட்டியை தனது மனைவி என்று அழைத்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபிறவி
மணிப்பூர், மெயின்பூரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆர்யன்(8). இவரது தாத்தா மனோஜ் மிஷ்ரா. சில நாட்களுக்கு முன் ரத்னாபூரில் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இவர் இறந்து 20 நாட்களுக்குப் பின் ஆர்யன் பிறந்துள்ளார்.

அந்தச் சிறுவன் பிறந்ததிலிருந்தே, ரத்னாபூர் செல்லவேண்டும் என கூறிவந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு சென்றுள்ளார். அப்போது தனது பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போது அவரை தனது மனைவி என்றும், தனது தாய் ரஞ்சனாவை மகள் எனவும் கூறி அழுதுள்ளார்.
திகைப்பில் மக்கள்
அதனையடுத்து விசாரிக்கையில், தான் மனோஜ் மிஷ்ரா என்றும் தான் மருஜென்மம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்ததாகவும்,

தனது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.