யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலை தான் - வினோத முடிவு எடுத்த கிராமம்!

Tamil nadu Death
By Sumathi Dec 12, 2022 07:54 AM GMT
Report

ஒரு கிராமம் பின்பற்றும் நடைமுறை ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு

நாகை, வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில், இறந்தவர்களுக்கு ஒரே ஒரு மாலைதான் போடவேண்டும் என்ற வழக்கத்தை பின்பற்ற கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுத்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் கூறும் காரணம் கவனம் ஈர்த்துள்ளது.

யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலை தான் - வினோத முடிவு எடுத்த கிராமம்! | One Flower Garland In Death Vedharanyam Village

என்னவென்றால், இறந்தவரின் மேலே நிறைய மாலைகள் போடுவதால், அவரின் உடலின் மீது மாலைகள் அப்படியே குவிந்து விடுகிறது. மேலும், நூற்றுக்கணக்கான மாலைகளை வெட்டி சுடுகாட்டுக்குச் செல்லும் வழியெங்கும் தூவிச் செல்கின்றனர்.

ஒரு மாலை தான்..

அப்போது சில நேரங்களில் மாலைகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குள்ளாகிறது. மாலைக்கு பதில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 200 வழங்கினால், அந்த தொகையை இறுதிச் சடங்கு நடத்த பயன்படும்.

மேலும் வாழும்போது ஏழை, பணக்காரர் வேறுபாட்டுடன் இருக்கிறார்கள், இறப்பில் அனைவரும் சமம் என்று இவ்வாறு இறந்தவர்களை வழியனுப்பி வைக்கிறோம் என தெரிவிக்கின்றனர்.