3 கிரகங்கள் அருகருகே வானில் தோன்றும் அபூர்வமான நிகழ்வு : இன்று மாலை கண்டுகளிக்கலாம்

tamilnadu-samugam
By Nandhini Jul 13, 2021 07:31 AM GMT
Report

வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றில் பல நம்கண்களுக்கு தெரிவதில்லை. சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும்.

சிலவற்றை வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசித்து மகிழ்வதற்கு ஓர் அற்புத வான்நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. வானில் சந்திரன், செவ்வாய், வெள்ளி ஆகிய நெருக்கமாக தோன்றும் அரிய நிகழ்வு இன்று நடைபெற உள்ளது.

அதாவது, பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபட்டு காணப்படும். அவ்வாறு தமது பாதைகளில் கோள்கள் பயணித்து கொண்டிருக்கும்போது பூமிக்கு அருகில் உள்ள கோள் தொலைவில் உள்ள கோளை முந்தி செல்வது போல் இருக்கும். அந்நேரத்தில் அந்த இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் காட்சித்தரும். இன்று மாலையில் வெள்ளிகோளும், மிகத் தொலைவில் இருக்கும் செவ்வாய்கோளும் அருகருகே இருப்பது போல் காட்சித்தர உள்ளது.

அப்போது அவற்றிற்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியை விட குறைவாக இருக்குமாம். இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீட்டின் மொட்டை மாடியில் நின்று மேற்கு திசையை நோக்கி வானத்தை உற்று பார்த்தால், அங்கு ஒளி பொருந்திய வெள்ளிக்கோள் கண்ணுக்குத் தெரியும். 

தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய் கோள் ஒளி குறைவாக, வெள்ளிக் கோளுக்கு அருகிலேயே இருப்பது போல் தோன்றும். இந்த அபூர்வ நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

3 கிரகங்கள் அருகருகே வானில் தோன்றும் அபூர்வமான நிகழ்வு : இன்று மாலை கண்டுகளிக்கலாம் | Tamilnadu Samugam