இது புதுசா இருக்கே.. டிரெண்டாகும் ஒரு நாள் திருமணம், சட்டபூர்வமானது இல்லை - காரணம் தெரியுமா?

China Marriage World
By Vinothini Sep 03, 2023 06:06 AM GMT
Report

 ஒரு நாள் திருமணம் தற்பொழுது அதிகரித்து கொண்டே வருகிறது.

திருமணம்

சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் இதுபோல ஒரு நாள் திருமணங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப்படி இவர்கள் ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

one-day-marriage-in-china

வழக்கத்தின் படி திருமணம் செய்து கொண்டு மனைவி, மக்கள் என குடும்பதை சுமக்க முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது.

இதனால் அவர்கள் மூதாதையர்களை அடைய முடியாது, அவர்களை இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்.

சடங்குகள்

இந்நிலையில், இந்த நம்பிக்கையின் காரணமாகத் தான் அங்கு இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது. இப்படி ஒரு நாள் திருமணத்திற்காகவே அங்குத் தனியாக கம்பெனி எல்லாம் இருக்கிறதாம்.

one-day-marriage-in-china

இதற்காகவே இங்குப் பல தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,600 யுவான். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 41ஆயிரத்து 400 ரூபாய். இதுபோக தரகருக்கு தனியாக கமிஷன் 1,000 யுவான் கொடுக்கவேண்டும். இதற்கு உள்ளூர் பெண்கள் தயங்குகிறார்கள் என்றும், இதனால் பணத்திற்காக வெளியூர் பெண்கள் செய்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த பின்னர் இருவரும் சம்மந்தமே இல்லாமல் சென்றுவிடுவார்கள் என்று கூறுகின்றனர். மேலும், இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை. எல்லாமே வெறும் சடங்கிற்காகச் செய்யப்படுகிறதாம்.