மூதாதையருடன் சொர்க்கத்தில் இணைய ஒரு நாள் திருமணம்; விநோதமான சடங்கு - எங்கு தெரியுமா?
மூதாதையருடன் சொர்க்கத்தில் இணைய ஒரு நாள் திருமணம் செய்துகொள்ளும் விநோதமான சடங்கு.
ஒரு நாள் திருமணம்
வடக்கு சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒருநாள் திருமணம் என்ற நடைமுறை அதிகரித்து வருகிறது. இறந்த பிறகு சொர்க்கத்தில் இருக்கும் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் நம்புகின்றனர்.
அங்குள்ள வழக்கத்தின் படி ஏழையாக திருமணம் செய்யமுடியாத நிலையில் இருக்கும் ஆண்கள் இறந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களை புதைக்க முடியாது. இதனால் அவர்களின் மூதாதையருடன் அவர்கள் சொர்க்கத்தில் சேர முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவர்களின் சம்பிரதாப்படி ஒருநாள் திருமணம் செய்த பிறகு, திருமணம் நடந்து விட்டதை மூததையர்களுக்கு காட்டும் வகையில் அவர்கள் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள்.
மேலும் இறந்த பிறகு புதைக்கப்படும்போது பணமும், தேவையான பொருட்களையும் சேர்ந்ததே புதைக்கின்றனர். ஏனெனில் இவையெல்லாம் சொர்கத்தில் தேவை என அவர்கள் நம்புகிறார்கள். முன்பு இங்கு திருமணமாகாமல் இருக்கும் ஆண்கள் சடங்கிற்காக உயிரிழந்தவர்களைக் கூட திருமணம் செய்து கொள்வார்களாம். இதன் காரணமாக கடந்த 5,6 ஆண்டுகளில் ஒருநாள் திருமணம் அங்கு அதிகரித்துள்ளதாம்.
ஒருநாள் திருமண பிரோக்கர்
இதுகுறித்து ஒருநாள் திருமணத்தை ஏற்பாடு செய்யும் தரகர் ஒருவர் கூறுகையில் 'ஒருநாள் திருமணங்களுக்காக தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,500 யுவான் (ரூ.41000). ஏற்பாடு செய்யும் தரகருக்கு கமிஷன் 1000 யுவான்.
ஆனால் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய உள்ளூர் பெண்கள் தயங்குகிறார்கள். இதனால் வெளியூர் பெண்களை ஒருநாள் திருமணத்திற்காக அனுப்புகிறேன். ஏழை மற்றும் நடுத்தர பெண்களே இதுபோல ஒருநாள் திருமணங்களுக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.
திருமணமான பெண்களும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இதற்கு சம்மதிக்கிறார்கள். ஆனால் இது சட்டபூர்வமான திருமணம் கிடையாது, வெறும் சடங்கிற்காக நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.