ரூட் தல விவகாரத்தால் நேர்ந்த கொடூரம்.. பயங்கர தகராறு - மாணவர் உயிரிழப்பு!
ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரூட் தல..
சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில்,
கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரூட் தல தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
மாணவர் உயிரிழப்பு
அதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து, பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ரயில் பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதனிடையே சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.