நீ எந்த காலேஜூ?... நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்!
கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் அட்டூலியம்
சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களிடையே மீண்டும், ரூட் தல யார் என்கிற பிரச்னை தலையெடுக்க துவங்கியுள்ளது.
நந்தனம் அரசு கல்லுாரியில் படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற மாணவர், நேற்று மாலை, பாரிமுனையிலிருந்து நங்கநல்லூர் செல்லும் பேருந்தில், பல்லவன் சாலை பணிமனை பஸ் ஸ்டாப்பில் எறியுள்ளார். ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை எதிரில் நின்ற போது அங்கிருந்த புதுக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஏறினர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், புதுக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அந்த மாணவரை கீழே இறக்கிவிட்டு நீ எந்த கல்லூரி என்று கேட்டு தாக்கியுள்ளனர். பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் நந்தனம் கல்லூரி மாணவர்கள் வந்தனர். தங்கள் கல்லூரி மாணவரை சிலர் தாக்குவதை கண்டதும் அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இந்த மாணவர்களை தாக்கியுள்ளனர். இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீஸார் மாணவர்களை விரட்டியடித்தனர். போலீஸாரை கண்டதும் அங்கிருந்து மாணவர்கள் தப்பி ஓடினர். அப்பொழுது போலீசார் துரத்தி பிடித்தனர், போலீசாரின் விசாரணைக்கு பிறகு அவர்கள் கண்டிக்கப்பட்டு, பின்னர் மூன்று மாணவர்களும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.