வகுப்பறைக்குள் ஆபாச செயலில் ஈடுபட்ட அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!
அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்கள் மோச செயல்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கால்லூரி உள்ளது. அங்கு படித்து வரும் மாணவ மாணவிகள் தவறான செயலில் ஈடுபட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் மாணவர் ஒருவர் அவரது காதலியிடம் சக மாணவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுக்க முயற்சிக்கும் காட்சிகள் உள்ளது.
வைரல் வீடியோ
இதனை தொடர்ந்து, வீடியோவில் அந்த மாணவி கூச்சப்பட்டு தள்ளிவிடுகிறார் ஆனால் அந்த மாணவர் கேட்காமல் அவரை பலவந்தமாக முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.