ஸ்டான்லி மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

Ma. Subramanian
By Vinothini May 29, 2023 07:29 AM GMT
Report

சமீபத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து சுகாதார துறை அமைச்சர் பேசியுள்ளார்.

நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் சிடி ஸ்கேன் கருவி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

minister-speaks-about-the-govt-hospitals

நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 708 மருத்துவமனைகளில் 500 மருத்துவமனைகளுக்கு பணியாளர் நியமனம் நடைபெற்று வருவதாகவும்,

ஒரே நாளில் 500 மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறினார்.

விளக்கம்

இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்கநர் சண்முகக் கனி திட்டத்தை விளக்கி பேசினார்.

அதில் "19 இடங்களில் இன்றைக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அறிவித்துள்ளோம்” என்று கூறினார்.

minister-speaks-about-the-govt-hospitals

மேலும், அவர் கூறுகையில், "இதுவரை 18 இடங்களில்தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருந்தள்ளது.

ஆனால் இப்போது திமுக பொறுபேற்று 2 ஆண்டு காலங்களில் 25 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாகி இருக்கிறது.

இந்த 25 மருத்துவமனைகளுக்கு 1090 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கி இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலும் 25 மாவட்டங்களில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனால், அரசு மருத்துவமனைகள் என்றால் குறை கூறும் மனப்போக்கு ஒரு சிலருக்கு உள்ளது. தொடர்ச்சியாக குறை கூறினால் அது யாருக்கு லாபமாக சேரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் விமர்சிப்பதற்கோ அதை தீர்ப்பதற்கோ இந்த அரசு தயங்கவே தயங்காது” என்று கூறினார்.