இன்று திருவோணம் - சென்னை உட்பட இந்த மாவட்டங்களுக்கெல்லாம் விடுமுறை!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை
திருவோணம் கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து இடங்களிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்திலும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
விடுமுறை
இந்நிலையில், திருவோணத்தை முன்னிட்டு, இன்று சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.'
அதே போல கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக, செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.