Wednesday, Jul 9, 2025

பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட தடை: கேரளா அரசு

Government Festivel Onam
By Thahir 4 years ago
Report

கேரளாவில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்கு உள்ள கேரளா மாநிலம் கடந்த முதல் அலையில் கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்கியிருந்தது அம்மாநில அரசு.

அதே போன்று இந்த ஆண்டும் கட்டுபாடுகளுடன் கூடிய அனுமதியை அளித்துள்ளது.

இந்நிலையில் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு கடன் தொகையாக ரூ.15,000 வழங்க உள்ளது.

இதை ஊழியர்கள் 5 தவணைகளாக செலுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதியில் ஓணம் பண்டிகை தொடங்குவதை அடுத்து அங்குள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.