இன்னும் 2 வாரங்களில்...3ம் உலக போர்? இந்திய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு!
மூன்றாம் உலகப் போர் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
3ம் உலக போர்?
மூன்றாம் உலகப் போர் குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வலம் வந்து கொண்டு இருக்கும். இதன் கருத்து பல சகாப்தங்களாக தீவிர விவாதமாக இருந்து வருகிறது. முன்னதாக நடந்த இரண்டு உலகப் போர்களின் தாக்கங்கள் இன்றளவிலும் உலக மக்களின் நினைவில் நீங்காமல் உள்ளது.
அந்த வகையில், தற்போது ரஷ்யா - நோட்டா உறுப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை காரணமாக மூன்றாம் உலகப் போர் நிகழும் என்ற கருத்து பரவி வருகிறது.
இது தொடர்பாக நாஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா போன்ற உலக புகழ்பெற்ற பல ஜோதிடர்களின் கணிப்புகள் உள்ளது. இருப்பினும், அவ்வப்போது இதுபோன்ற கணிப்புகள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்திய ஜோதிடர்
அந்த வரிசையில் ஹரியாணாவை சேர்நத ஜோதிடர் குஷால் குமார் உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடர் என தன்னை வர்ணித்துக் கொள்கிறார். இது குறித்து அண்மையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 மே 8ல் போர் நிலைமைகள் மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் என கணிக்கப்பட்டது - இது கொரியாக்கள்,
சீனா - தைவான், வடமேற்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் தீவிரமடையும் என கணிக்கப்பட்டது. சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை சமாளிக்க மிகவும் கஷ்டப்படக்கூடும் என்றும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம் அல்லது ராஜினாமா செய்யலாம்.
அரசியல் களத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியாது. சுருக்கமாக, பாதிக்கப்படக்கூடிய இடங்களில், ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை எடுக்க ராணுவம் முன்வரலாம் என்று சமகால கிரக நிலைகள் தெரிவிக்கின்றன. இப்போது, 2024 ஜூன் 18 (செவ்வாய்க்கிழமை) மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலைகளைக் கொண்டுள்ளது. எனினும் ஜூன் 10 மற்றும் 29 ஆகிய தேதிகளையும் இதனுடன் கூறலாம்" என குறிப்பிட்டுள்ளார்.