கவிழ்ந்த ஆம்னி பேருந்து; சிதறிய உடல்கள் - 2 பேர் பலி!
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து விபத்து
புதுச்சேரியில் இருந்து திருப்பூர் பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

அதனால், சாலையின் நடுவே பேருந்து அப்படியே கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இருவர் பலி
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், பலியானர்வர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan