மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி மோதி கோர விபத்து - 3 பேர் பலி!
ஆம்னி பேருந்து ஆம்புலன்ஸ் மீது மோதியதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
கோர விபத்து
பெரம்பலூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர். அதனையடுத்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு அதில் ஏற்றினர்.
அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரை தாண்டி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
அதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு,
வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.