பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : 10-வது நாள் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர்கள்!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நகரில் கடந்நத ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதமன் 11 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளனர்.
ஒலிம்பிக்
இந்த பார்சி ஒலிம்பிக்சில் 32 வகையான விளையாட்டுகளில் 329 விதமான போட்டிகள் நடைபெற உள்ளனர்.இதில் 206 நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இன்று எந்தெந்த போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துப்பாக்கிசூடு: இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் துப்பாக்கிச்சுடுதல் ஸ்கீட் கலப்பு பிரிவு போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
டேபிள் டென்னிஸ் :பகல் 1.30 மணிக்கு மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா - ருமேனியா மோத உள்ளது.
போட்டிகள்
ஓட்டப் பந்தயம் : பிற்பகல் 3.25 மணிக்கு நடைபெறும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணியின் கிரஸ் பாகல் பங்கேற்க உள்ளது.
மல்யுத்தம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா தகியா பங்கேற்க உள்ளது.
ஸ்டீப்பிள் சேஸ் : இரவு 10.30 மணிக்கு நடைபெறும் 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் அவினாஷ் சாப்லே பங்கேற்க உள்ளது.
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் இன்று விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.