ஒலிம்பிக்கில் வெடித்த சர்ச்சை...46 நொடிகளில் முடிந்த போட்டி- குத்துச்சண்டையில் பெண்ணுடன் மோதிய ஆண்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் biological ஆணாக இருக்கும் ஒருவருடன் குத்துசண்டை போட்டியில் களமிறக்கப்பட்டதால், இத்தாலிய வீராங்கனை மனமுடைந்து போட்டியில் இருந்து விலகினார்.
சர்ச்சை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33-வது உலக ஒலிம்பிக் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற குத்துசண்டை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகளிர் 66 எடைப்பிரிவின் 16-வது சுற்றில், இத்தாலியின் ஏஞ்சலா கரினி(Angela Carini) மற்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே கெலிஃப் (Imane Khelif) ஆகியோர் போட்டியிட்டனர். போட்டி துவங்கிய 46 வினாடிகளிலேயே ஏஞ்சலா கரினி போட்டியில் இருந்து விலகினார்.
ஆணுடன்
அவருக்கு தனக்கு எதிராக களமிறங்கியவர் ஆண் என்ற காரணத்தை முன்வைத்து போட்டியில் இருந்து விலகினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
முன்னதாக 2023-ஆம் ஆண்டின் இமானே கெலிஃப் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி தொடரிலும் போட்டியிட இருந்த நிலையில், பாலின அளவுகோள்களை அவர் பூர்த்தி செய்யாததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அவ்வாறான நிலையில், அவர் தற்போது ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று அவரால், பெண் ஒருவர் போட்டியில் இருந்து விலகியுள்ளது பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.