உலகில் முதல் முறை சாப்பிடப்பட்ட உணவுகள் எவை தெரியுமா? சுவாரஸ்ய தகவல்!
முதல் முறையாக சுவைக்கப்பட்ட உணவுகள் என்னவாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரொட்டி
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்த நடுபியன் வேட்டைக்காரர்கள் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்-ரஷ் கிழங்குகள் வைத்து ரொட்டி செய்து சுட்டு சாப்பிட்ட ஆதாரங்கள் தான் தற்போது உள்ளன.
தமால்
உலகின் பழமையான துரித உணவு தமால் என்று அறியப்படுகிறது. தமால் என்பது மெசோ அமெரிக்காவில் போர் படையினருக்கு கொடுக்க தயார் படுத்த பட்டது. சோள உமி அல்லது வாழை இலைகள் நடுவே இறைச்சிகள், பீன்ஸ், பழங்கள், வைத்து சுற்றி கொடுக்கப்படுவது.
தேன்
உலகின் பழமையான தேன் பண்டைய எகிப்தில் உள்ள ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகள் முன்பு இருந்து உணவாக சாப்பிட்டுள்ளனர்.
மெசபடோமியன் ஸ்டியூ
மேலும், மெசபடோமியன் ஸ்டியூ என்ற உணவு குறித்து கிமு 3750 இல் சுமேரிய கியூனிஃபார்ம் கல் சுவடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சில நறுமணப் பொருட்கள், இறைச்சி, கொழுப்பு மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பூண்டு, கடுகு
சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார்க் மற்றும் ஜெர்மனியில் வேட்டையாடுபவர்கள் விவசாயத்தின் வளர்ச்சிக்கு முன்பே தங்கள் உணவை சுவைப்படுத்த பூண்டு, கடுகு விதைககளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு பின்னர் தான் மிளகு பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.