Just one Coffee: இப்படி ட்ரை பண்ணுங்க - கேன்சருக்கு Bye சொல்லும் காஃபி!

Healthy Food Recipes
By Sumathi Sep 29, 2022 01:55 PM GMT
Report

புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தை காஃபி குறைக்குதாம். இப்படி ட்ரை பண்ணி பாக்கலாம்...

காபி லவ்

பலர் இங்கு காபி மூலமே நாளையெல்லாம் கடத்துவார்கள். அவ்வளவு பிரியம் இருக்கும் காபி மேல.. அதுனால எதோ புதிய சக்தி கிடைத்தது போல இருக்கும். மேலும், பலருக்கும் காலையில் எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்ட காபி லவ்வர்ஸ்க்கு ஒரு குட்நியூஸ்...

Just one Coffee: இப்படி ட்ரை பண்ணுங்க - கேன்சருக்கு Bye சொல்லும் காஃபி! | Does Coffee Reduce Risk Of Cancer

 சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு, ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று கப் காபி குடிப்பது புரோஸ்டேட் கேன்சருக்கான அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய் 

மேலும், இது பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணியாகவும் இருந்து வருகிறது. சர்க்கரை மற்றும் பால் இல்லாத காபியை நாம் குடிக்கும் போது இரண்டாவது வகை நீரழிவு நோய் வருவது குறைகிறது.

Just one Coffee: இப்படி ட்ரை பண்ணுங்க - கேன்சருக்கு Bye சொல்லும் காஃபி! | Does Coffee Reduce Risk Of Cancer

மேலும், தினமும் காபி பருகுவதால் மன அழுத்தம் குறைவதோடு, தொடர்ச்சியாக குடிக்கும்போது கீழ்வாதம் ஏற்படும் அபாயம் குறைவதும் தெரிய வந்துள்ளது. காபி உடலின் தசைகளை வலிமைப் பெற செய்யும் என்பதால் உடற்பயிற்சி செய்யும் முன் இதனை பருகுவது நல்லது.

முக பளபளப்பு

மேலும், காபி பொடியை சிறிதளவு ஆலிவ் ஆயில் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் முகம் பளபளப்பாக மாற உதவும். காபி குடிப்பதால் உடலில் அட்ரீனலின் அளவு அதிகரித்து நம்மை சுறுசுறுப்பு ஏற்பட்டு,

தாம்பத்திய வாழ்கை மேம்படுத்த உதவியாக இருக்கும்.மேலும், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.