ஒரு நாளைக்கு 2, 3 முறை காஃபி குடிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ...!
healthtips
benefitsofdrinkingcoffee
benefitsofcoffee
By Petchi Avudaiappan
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அல்லது நீங்கள் ஒரு காஃபி லவ்வரா? . அது எதுவாகினும் இப்படியான குணம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி சமீபத்திய ஆய்வின்பட மூலம், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காஃபி குடிப்பது இதயத்திற்கு நல்லது என்பது கண்டறியப்பட்டுள்ளது. காஃபியில் கூட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சில ஊட்டச்சத்துக்கள் சில குறிப்பிட்ட வியாதிகள் ஏற்படுத்தும் இடர்பாட்டை பெருமளவில் குறைக்கிறது.
- மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை காபி மேம்படுத்தும் என்பதால் தான் பலரும் வேலையின் போது அடிக்கடி காஃபி குடிக்கிறார்கள்.
- கல்லீரலைப் பாதுகாக்கவும் காஃபி பயன்படுகிறது. அதேசமயம் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் அருமருந்தாகவும் காஃபி உள்ளது.
- காஃபியினால் கிடைக்கும் மற்றொரு பயன் அட்ரினலின் ரஷ் எனப்படும் உடல் ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாகும்.
- பொட்டாசியம், மாங்கனீஸ், பாண்டோதெனிக் அமிலம், நையாசின், மக்னீசியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்றவை காஃபியில் அடங்கியுள்ளது.
- பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோயை தடுக்கவும் கூட காப்ஃபைன் முக்கிய பங்கை வகிக்கிறது. கொழுப்பை எரிக்கும் பொருட்களில் மிக முக்கியமானது காப்ஃபைன் என்பதால் காஃபி குடித்தால் உடல் எடை குறையும் என நினைப்பது தவறு.
- சர்க்கரை நோயைத் (டைப் 2) தடுக்கவும் காபி உதவுகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இத்தகைய காஃபியின் நன்மைகளை தெரிந்துக் கொண்ட பின்பும் தொடர்ந்து அடிக்கடி குடிக்காமல் தினசரி வாழ்வில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பருகுவது நல்லது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan