புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்..34 வயது நபரை ஏமாற்றி பெண் செய்த காரியம் - போலீசில் புகார்!
34 வயதான நபர் ஒருவர் அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏமாற்றிய பெண்
குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபருக்கு சென்ற ஆண்டு இவருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது அவரது மனைவியின் வயது 32 என பெண் வீட்டார் கூறியுள்ளனர். அதற்கு ஆதாரமாக அந்த பெண் 1991 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்ததாக அவரது பாஸ்போர்ட்டை பெண் வீட்டார் காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றபோது தான் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
போலீசில் புகார்
அதாவது, அந்த பெண்ணால் இயற்கையான முறையில் அப்பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அப்பெண்ணிற்கு குறைந்தது 40 - 42 வயது இருக்கும் என்றும் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
அதை கேட்டத்தும் பேரதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலியான ஆவணம் கொடுத்து மோசடி செய்து திருமணம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், அவரது மனைவி, மாமனார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தீவிரதமாக விசாரித்து வருகின்றனர்.