தெரிந்தே 3 கணவர்: ஆண்டியால் சீரழிந்த ஆண்டி ஹீரோ - 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பலே பெண்!
திருப்பதியில் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு பணத்தை எடுத்து தப்பியோடிய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் திருப்தியைச் சேர்ந்த சுனில் குமார் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் கடந்த வருடம் ஏடிபி பைனான்ஸ் நிறுவன ஊழியர் எனக்கூறி சுஹாசினி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் இருவரும் நெருக்கமாக பழகி காதலித்துள்ளனர். சுஹாசினி தான் ஒரு அனாதை என்றும் ஒரு கூட்டு குடும்பத்தில் மருமகளாக செல்ல ஆசைப்படுவதாகவும் கூறி சுனில்குமாரின் பெற்றோரை நம்ப வைத்துள்ளார். அதனையடுத்து இருவரும் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.
அப்போது சுனில்குமார் பெற்றோர் சுஹாசினிக்கு 20 கிராம் தங்க நகையை வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய உறவினரின் மருத்துவச்செலவுக்கு பணம் தேவை படுவதாக சுனில்குமாரிடம் சுஹாசினி கூறி 4 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். மேலும், அதே காரணத்தை சொல்லி மாமனாரிடமும் ரூ. 2 லட்சத்தை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கொடுத்த பணத்தை என்ன செய்தாய் என்று சுனில்குமாரின் வீட்டார் கேட்டதையடுத்து அன்றைய தினமே சுஹாசினி வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார் சுஹாசினியை பற்றி தெரிந்துகொள்ள அவரது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே சுனில்குமாரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட சுஹாசினி, நான் இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். உங்களது பணத்தை விரைவில் திருப்பி கொடுத்து விடுவேன். அதற்குள் என்னை பற்றி போலீசில் புகார் அளித்தால் விபரீதத்தை சந்திப்பீர்கள்' என்று கூறி மிரட்டியுள்ளார்.
இந்த அதிர்ச்சிக்கு மத்தியில் வெங்கடேசை போல வேறொருவரை திருமணம் செய்ததான புகைப்படங்களையும் சுனில்குமாரின் வாட்சப் எண்ணிற்கு சுஹாசினி அனுப்பியுள்ளார்.
சுனில்குமாரையும் சேர்த்து இதுவரை மொத்தம் மூன்று பேரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பது சுனில்குமாரின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுனில் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுஹாசினியை தீவிரமாக தேடி வருகின்றனர்.