முதுகுவலி சரியாகனும்; 8 தவளைகளை உயிரோடு விழுங்கிய பாட்டி - ஷாக் பின்னணி!
மூதாட்டி ஒருவர் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுவலி
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்த 82 வயதான ஜாங் என்பவர், பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்தும்,அது பலனளிக்கவில்லை. இந்நிலையில், நாட்டு வைத்திய முறைப்படி உயிருடன் தவளைகளை விழுங்கினால், முதுகுவலி உடனடியாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை நம்பி ஜாங், அருகிலிருந்த நீர்நிலையில் எட்டு சிறிய தவளைகளைப் பிடித்து, அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உயிருடன் விழுங்கியுள்ளார்.
மூதாட்டியின் செயல்
பின் மூதாட்டி ஜாங்கிற்கு எதிர்பாராத விதமாக கடுமையான வயிற்று வலியும், குமட்டலும், உடல் சோர்வும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு அவரது வயிற்றில் இருந்த தவளைகளின் எச்சங்களால் ஏற்பட்ட கடுமையான தொற்று மற்றும் செரிமானக் கோளாறுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.