சிறையில் இருப்பதற்காகவே திரும்ப திரும்ப தவறு செய்யும் 81 வயது மூதாட்டி - காரணம் கேட்டால் ஷாக்!
மூதாட்டி ஒருவர் சிறையில் இருப்பதற்காக வேண்டுமென்றே குற்றம் செய்கிறார்.
வாட்டும் தனிமை
ஜப்பான், டோக்கியாவைச் சேர்ந்தவர் அகியோ(81). இவர் தனது 60வது வயதில் உணவைத் திருடியதற்காக முதலில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்நாட்டின் மிகப்பெரிய டோச்சிகி பெண்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். தனது ஓய்வூதியத்தில் உயிர் வாழ்வது கடினமாக இருந்த காரணத்தால், அகியோ மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டு சிறை சென்று வருகிறார். இதுகுறித்து பேசியுள்ள அகியோ,
வெளியே தனியாக இருப்பதைவிட அங்கு வாழ்வது மிகவும் நிலையானதாக உணர்ந்தேன். சிறையில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த வாழ்க்கைதான் எனக்கு மிகவும் நிலையானதாக இருக்கலாம். தனது 43 வயது மகனுடன் வசித்து வந்தேன். அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறினான்.
மூதாட்டியின் செயல்
2024-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பயமும் அவமானத்துடனும், தன் மகன் தன்னை எப்படிப் பார்ப்பானோ என்று கவலைப்பட்டேன். தனியாக இருப்பது மிகவும் கடினம். நான் இந்த சூழ்நிலையில் விழுந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். எனக்கு மன தைரியம் இருந்திருந்தால், வேறு ஒரு வாழ்க்கையை நடத்தி இருக்கலாம்.
ஆனால், இப்போது எனக்கு வயதாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல வயதான கைதிகள் வெளியே தன்னந்தனியே கைவிடப்படுவதைவிட சிறை வாழ்க்கையை விரும்புகின்றனர். சிலர் சிறையில் இருக்க மாதத்திற்கு சுமார் ரூ.11,200 முதல் ரூ.16,800 வரை செலுத்தத் தயாராக இருப்பார்கள் என சிறை அதிகாரி தகாயோஷி ஷிரானாகா தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் ஆயுட்காலம் மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகியவற்றால், ஜப்பான் தனது வயதான குடிமக்களைப் பராமரிப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.